Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா பரோல் மனு: சிறை நிர்வாகம் அதிரடி முடிவு

, செவ்வாய், 6 ஜூன் 2017 (00:11 IST)
அதிமுக அம்மா அணியில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை சரிசெய்ய வெளியே வரவிரும்பிய சசிகலா, பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார்.  சென்னையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோலில் தன்னை விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ததார்.



 


ஆனால் இந்த மனுவை பரிசீலனை செய்த சிறை நிர்வாகம் ரத்த சொந்தங்களில் நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்ள பரோல் வழங்கப்படும் என்றும் அண்ணன் மகன் திருமணத்திற்கு பரோலில் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறி அதிரடியாக பரோல் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஒரு நாள் பரோல் கேட்டிருந்தால் சிறை நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் ஆனால் மூன்று நாட்கள் வரை அவர் பரோல் கோரியிருந்ததால் பரோல் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  ஏற்கெனவே, சசிகலா தனது அக்கா மகன் மகாதேவன் மறைவை ஒட்டி இறுதி அஞ்சலி செலுத்த பரோல் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடக்க டாஸ்மாக் காரணமா? நெல்லையில் ஒரு வினோதம்