Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (19:14 IST)
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 
இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல காவல்துறை அலுவலகங்களில் புகார்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இதனைத் தொடர்ந்து, நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தமிழக பாஜக சென்னையில் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அதையடுத்து நேற்று முன் தினம்  இரவு 9 மணியளவில் பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணனை  போலிஸார் கைது செய்தனர்.
 
இந்நிலையில், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நெல்லைக் கண்ணனை வரும் 13 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 
 பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாகப் பேசிய வழக்கில்  இன்று நெல்லை கண்ணனின் ஜாமீன் மனுவை  நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments