திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் கைதான விவசாயிகளுக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கடந்த 4 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளில் 19 விவசாயிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.