Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுகவில் அழகிரியின் மகனுக்கு பதவி?

திமுகவில் அழகிரியின் மகனுக்கு பதவி?

திமுகவில் அழகிரியின் மகனுக்கு பதவி?
, திங்கள், 1 ஜனவரி 2018 (12:47 IST)
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளித்து பதவி வழங்க வாப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
திமுகவில் எந்த காலத்திலும் தீராத ஒன்று குடும்ப பிரச்சனை. தலைவர் பதவி விவகாரத்தில் மு.க.அழகிரி ஸ்டாலின் மீது நேரடி குற்றச்சாட்டுகளை வைக்க அவர் கட்சியில் இருந்தே தூக்கப்பட்டார். இதனையடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் அழகிரி.
 
ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட்டை இழந்து படுதோல்வியடைந்ததை அடுத்து மு.க.அழகிரி மீண்டும் ஸ்டாலின் மீது பாய்ந்தார். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். அழகிரியை மீண்டு கட்சிக்குள் சேர்க்க அவர்கள் குடும்பத்தை சேர்ந்த சிலர் பல முயற்சிகள் எடுத்தன, ஆனால் ஸ்டாலின் தரப்பு அதற்கு கடுமையன எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
 
ஸ்டாலின் தரப்புக்கும், அழகிரி தரப்புக்கும் இடையே மோதல் இருந்தாலும் அவர்களது வாரிசுகள் சகஜமாகவே பழகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழகிரியை கட்சிக்குள் ஏற்க தயங்கும் ஸ்டாலின் தரப்பு அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு பதவி அளிக்கலாம் என சிக்னல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்க்கிங் பிரச்சனையில் ஒருவருக்கு துப்பாக்கி சூடு