மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்
இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக கடந்த குடியரசு தின தினத்தில் டிராக்டர் பேரணி நடைபெற்றது என்பதும் இந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் ஒருசில விவசாயிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லியில் ஏற்கனவே எல்லைகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது டெல்லியில் தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்கள் பற்றி அறிவிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதுகுறித்து அய்யாக்கன்ணு இன்று அளித்த பேட்டியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தற்கொலை போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது