Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினி ரசிகர்களைக் கடுப்பேத்திய சித்தார்த்தின் டிவீட்!

Advertiesment
ரஜினி ரசிகர்களைக் கடுப்பேத்திய சித்தார்த்தின் டிவீட்!
, வியாழன், 28 ஜனவரி 2021 (11:26 IST)
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பகிர்ந்த ஒரு டிவீட் ரஜினி ரசிகர்களைக் கடுப்பாக்கியுள்ளது.

டெல்லியில் குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியபோது காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவானது. மத்திய அரசின் இந்த போக்கு எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு டிவிட்டை பகிர்ந்திருந்தார். அதில் ‘எப்போதும் போராட்டத்தை வன்முறையுடன் சமன் செய்கின்றனர். பாசிசம், ஒற்றை கொள்கை, வெறுப்பு அரசியல், ஏழைகள் மீதான வெறுப்பால் கீழ் நோக்கி செல்கிறோம். போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சில கோமாளிகள் சொல்வார்கள். அவர்களை புறக்கணியுங்கள்’ எனக் கூறியிருந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது  ’போராட்டம் செய்வது தவறு… இப்படியே போராட்டம் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகிவிடும்’ என ரஜினி கூறியதைக் கேலி செய்யும் வகையில்தான் சித்தார்த் டிவீட் செய்துள்ளதாக பலரும் கூற, இப்போது ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சித்தார்த்தை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் படத்தால் குவியும் வாய்ப்புகள்… மீண்டும் ஒரு கலக்கு கலக்குவாரா?