Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையே காலி.. வெறிச்சோடிய தெருக்கள்..!

Siva
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (07:51 IST)
ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதை அடுத்து சென்னையே காலியாக இருப்பதாக பார்க்க முடிகிறது.

குறிப்பாக நேற்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு பொதுமக்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது என்றும் சாலைகளிலும் பொதுமக்கள் அதிகம் காணப்படவில்லை என்றும் வாகனங்களும் குறைவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றை விட இன்று சென்னையின் தெருக்கள் மிகவும் வெறிச்சோடி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில், நேற்று ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை குவிந்ததால் ஏராளமான பொதுமக்களை அங்கு பார்க்க முடிந்தது.

சென்னையில் இருந்து 2,100 பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில், கூடுதலாக 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் பயணம் செய்ய கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதேபோல் ரயில் நிலையங்களிலும் ஏராளமான பொதுமக்கள் இருந்தனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்வதற்காக மாநகர பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments