வண்டி நிறுத்துவதில் வாக்குவாதம் – கோவையில் ஆட்டோ டிரைவர் கொலை !

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (14:20 IST)
கோவை ஐடி பார்க் முன்பு வாகனங்களை நிறுத்துவதில் இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள கோவிலாம்பாளையம் காவல்கோட்டத்துக்கு உட்பட்ட கீரணத்தம் பகுதிக்கு ஆட்டோ ஓட்டுனர் அருண் பிரசாத் வந்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவுக்குப் பக்கத்திலேயே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்கள் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

வண்டியை உரசுவது போல அருகிலேயே நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் முற்றிய வாக்குவாதத்தில் வண்டியில் வைத்திருந்த சில கட்டுமானப் பொருட்களால் அருண்பிரசாத்தைத் தாக்கியுள்ளனர்.

இதில் அவரது கை,மார்பு, வயிறு பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அதனையடுத்து அவரை அங்குள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்க்க கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments