Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 10 ஜனவரி 2025 (15:17 IST)
வளிமண்டல சுழற்சி காரணமாக மீண்டும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் உள்ளது. இந்த நிலையில், நேற்று வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக இன்றும் நாளையும் (ஜனவரி 10 மற்றும் 11) தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை, இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு.. 22 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் விடுதலை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! - முதல்வரின் அதிரடி சட்டத்திருத்தம்! முழு விவரம்!

வாடகைக்கு நண்பராக சென்று ரூ.69 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்.. முழு விவரங்கள் இதோ:

அடுத்த கட்டுரையில்
Show comments