Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் கைதான 84 தமிழர்கள் விடுதலை

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (22:06 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி அருகே உள்ள ஆஞ்சநேயபுரம் என்ற பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாக சந்தேகத்தில் 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் கைதான 84 பேர்களும் சற்றுமுன்னர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

கைதான 84 பேர்களும் வேலூர், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான 84 பேர்களிடம் இனிமேல் ஆந்திர மாநில வனப்ப்குதிகளுக்குள் வரமாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டும், ஆந்திர மாநில போலீசார் அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளை ஏற்று 84 பேர்களும் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதை அடுத்து 84 தமிழர்களையும் விடுவித்து ரேணிகுண்டா வட்டாட்சியர் நரசிம்மலு நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து 84 பேர்களும் இன்னும் சிறிது நேரத்தில் தமிழகத்திற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments