Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா குடும்பத்தில் 10க்கும் மேற்பட்டோர் கைது? - களம் இறங்கும் சிபிஐ,அமலாக்கத்துறை

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (14:09 IST)
சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனை தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சசிகலா குடும்பத்தை மத்திய அரசு உடும்பு பிடியாக பிடித்துவிட்டது, இனிமேல் சும்மா விடாது என பரவலாக பேச்சு உள்ளது.


 
 
சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரன், தினகரன், விவேக், கிருஷ்ணப்ரியா, சிவகுமார் உள்ளிட்ட பலரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையிட்டு பல ஆவணங்களை கைப்பற்றியது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தவாறு உள்ளது.
 
இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசியின் மகன் விவேக், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா உட்பட சசிகலா குடும்பத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை சட்டவிரோத பணப் பரிமாற்றம் வழக்கில் கைது செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும். அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் களமிறக்க மத்திய அரசு திட்டமிடுகிறது என டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments