Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் அரியலூரில் இத்தனை பேருக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 6 மே 2020 (16:50 IST)
அரியலூரில் இன்று மட்டும் 168 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த மாவட்டங்களில் அரியலூரும் ஒன்றாக இருந்தது. அங்கு நேற்றுவரை 8 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சையில் 4 பேர் குணமாகி வீடு திரும்பினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அரியலூர் வந்தவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிட்டதட்ட 2500 பேருக்கும் மேல் அரியலூரில் இருந்து கோயம்பேடு மாவட்டத்தில் வேலைப் பார்ப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அரியலூருக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொரோன சோதனை மேற்கொள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று மட்டும் 168 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே 34 பேருக்குக் கொரொனா இருந்த நிலையில் இப்போது எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments