திருவள்ளூரில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (08:26 IST)
திருவள்ளூர் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரு வேறு அணிகளாக பிரிந்த ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி நீண்ட போராட்டங்களுக்கு இடையே ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைந்தது முதலே இரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகிறது. ஈபிஎஸ் அணியினர் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஓபிஎஸ்  அணியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
 
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் முன்னிலையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எங்களுக்கு எந்த வித முன்னுரிமையும் தருவதில்லை என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மீது குற்றம் சாட்டினர். மேலும் எந்த வித அரசு ஒப்பந்தங்களையும் தங்களுக்கு தருவதில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் அணீயினர் மீது குற்றம் சாட்டினர்,  பின்னர் அனைவரையும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமாதான செய்து வைத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அதிரடி மாற்றம்: அடுத்த 45 நாட்களுக்கு புதிய ரயில் அட்டவணை!

காங்கிரஸ் போட்ட 2 கண்டிஷன்கள்!.. திமுக கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல்!...

2026-27 நிதியாண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள்?

ராகுல் காந்தி அந்த பதவிக்கே லாயக்கற்றவர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் மனைவி கடும் தாக்கு..!

அமெரிக்காவில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. நாடு கடத்தப்படும் இந்தியர்?

அடுத்த கட்டுரையில்
Show comments