Webdunia - Bharat's app for daily news and videos

Install App

86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல்.. எந்தெந்த மாவட்டங்களில்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!

Prasanth Karthick
திங்கள், 10 பிப்ரவரி 2025 (20:15 IST)

தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டாக்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு முழுவதும் அரசுக்கு சொந்தமான பதியப்படாத புறம்போக்கு நிலங்களில் ஏழை, எளிய மக்கள் பலர் பட்டா இன்றி குடிசைகள், வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். பல தலைமுறைகளாக புறம்போக்கு நிலத்தில் வாழும் மக்களும் இருக்கின்றனர். நீண்ட காலமாக அப்படியாக ஒரே இடத்தில் வாழ்பவர்கள் அந்த இடத்தில் பட்டா தருமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

இந்நிலையில்தான் தமிழ்நாடு முழுவதும் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி, தலைநகரமான சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் பெல்ட் ஏரியாக்களில் உள்ள ஆட்சேபணை அற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 29,187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.

 

அதுபோல மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்டத் தலைநகர் பகுதிகளில் மொத்தம் 57,084 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டா வழங்கும் பணிகளை அடுத்த 6 மாத காலக்கட்டத்திற்கு இதனை செய்து முடிக்க இரண்டு சிறப்பு குழுக்களையும் அமைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.’

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 24 வயது இளைஞர்: அமேதியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments