Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை..!

Siva
திங்கள், 10 பிப்ரவரி 2025 (16:09 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்பின்போது ஜான் ஆரோக்கியசாமி கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலை சந்திப்பது குறித்து பிரசாந்த் கிஷோரிடம் விஜய் ஆலோசனை கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூன் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாகவும், அவருடைய அறிவுறுத்தலால் தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுகவுக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருந்தார் என்பதும், அவருடைய சில அறிவுறுத்தலின் படிதான் திமுக வெற்றி பெற்றது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விஜய்யின் கட்சிக்காக அவர் ஆலோசகராக செயல்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில், அவர் ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை பீகாரில் தொடங்கியுள்ளார் என்பதும், வரவிருக்கும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் அந்த கட்சி போட்டியிடப் போவது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், விஜய் மற்றும் பிரசாந்த் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜெயிலுக்கு போகும் முதல் திமுக அமைச்சர் இவர்தான்! - அண்ணாமலை எச்சரிக்கை!

டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம்.. காணொளி மூலம் திறந்து வைத்த ஈபிஎஸ்.!

செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுனர் அனுப்பியது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..!

80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 24 வயது இளைஞர்: அமேதியில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவை வளர்த்து விட்டதே அதிமுகதான்! பாஜகவை கைக்காட்ட பாமக தயங்குகிறது! - திருமாவளவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments