ஜெயலலிதா மர்மத்தை உடைக்கும் பிரதாப் ரெட்டியின் பேட்டி (வீடியோ இணைப்பு)
ஜெயலலிதா மர்மத்தை உடைக்கும் பிரதாப் ரெட்டியின் பேட்டி (வீடியோ இணைப்பு)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 70 நாட்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி அவரது உடல்நிலை குறித்து நிலவி வந்த மர்மங்களை உடைப்பதாக அமைந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அவர் சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி. உடல்நிலை குறித்த தகவலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா ஆரோக்கியத்துடன் இருக்கிறார், அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்துகிறார் என அதிமுக செய்தி தொடர்பாளர்கள் பேட்டியளித்து வந்தனர். அதே நேரம் சென்னை, இந்தியா, உலகம் என பல்வேறு தலை சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
அதன் பின்னர் தான் முதல்வருக்கு இருக்கும் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் குறித்து வெளியில் பேசப்பட்டது. ஆனால் அதிமுக தரப்போ முதல்வர் சாப்பிடுகிறார், டிவி பார்க்கிறார், தொலைப்பேசியில் பேசினார் என கூறிவருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியில் பேசப்பட்டுவந்த மர்மங்களை உறுதிப்படுத்தும் விதமாக அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த பேட்டியின் உள் அமைந்துள்ள சாரம்சங்களை கூறும் வீடியே பதிவு கீழே உள்ளது.