திருமாவளவன் புத்தகத்தை வெளியிடுகிறார் விஜய்.. கூட்டணிக்கு அச்சாரமா?

Siva
சனி, 2 நவம்பர் 2024 (12:30 IST)
புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவதால் இரு கட்சிகளும் கூட்டணிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சட்டமேதை அம்பேத்கார் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புத்தகம் ஒன்று தயாரிக்கப்பட்ட நிலையில், இந்த புத்தகத்தில் அம்பேத்கர் குறித்த பல அரிய தகவல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 
 
38 தழுத்து எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், இந்த புத்தகத்தில் ஆதவ் அர்ஜூனா ஒரு கட்டுரை எழுதி உள்ளார். 2000 பக்கம் கொண்ட இந்த புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் வரும் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. 
 
இந்த விழாவில் சில முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகிய இருவரும் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
அம்பேத்கர் புத்தகத்தை திருமாவளவன் வெளியிடுவார் என்றும், விஜய் அந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்தால், அந்த கூட்டணி பெரும் மாற்றத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் என கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments