டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Prasanth K
திங்கள், 16 ஜூன் 2025 (12:25 IST)

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளால் பலர் மதுக்கு அடிமையாவதாகவும், உடல் நலம் குன்றி பலியாவதும் தொடர்வதாக பல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

அவ்வாறாக கடந்த 2016ம் ஆண்டு சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

இதை விசாரித்த நீதிபதிகள் “டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராடுவதை குற்றச்செயலாக கருத முடியாது. அமைதியாக போராடும் நபர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதே ஜனநாயக உரிமைக்கு எதிரானது” என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments