Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரபாண்டி ஆறுமுகத்தைவிடவா நான் ரவுடிகளை சேர்த்துவிட்டேன்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி..!

Siva
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (14:24 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரவுடிகளை தனது கட்சியில் சேர்த்து கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில் திமுகவில் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தை விடவா ரவுடிகளை நான் கட்சியில் சேர்த்து விட்டேன் என்று அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது பாஜகவில் அண்ணாமலை ரவுடிகளை சேர்த்து இருப்பதாக பேசியிருந்தார். இந்த நிலையில் அதே சேலத்தில் இன்று அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அண்ணன் வீரபாண்டி ஆறுமுகத்தை விடவா நான் ரவுடிகளை சேர்த்து விட்டேன், திமுகவும் ரெளடிசம் ஒன்றை ஒன்று பின்னும் பிணைந்தது, காவல்துறையை வாடா போடா என்று பேசுகிற அளவுக்கு தான் திமுக இருக்கிறது

கள்ளச்சாராயம் காய்ச்சியதற்காக சிறையில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது அமைச்சராக இருக்கிறார்கள், 35 அமைச்சர்களில் 15 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது, ஒரு அமைச்சர் சிறையில் இருக்கிறார் இன்னொருவர் விரைவில் ஜெயிலுக்கு போக போகிறார் என்று அண்ணாமலை பேசினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments