Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கினால் நீட் ரத்தாகிவிடுமா? உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (11:24 IST)
நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் தொடங்கிய நிலையில் இதில் 50 லட்சம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இது குறித்து அண்ணாமலை கூறிய போது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் ஒரு கட்சியில் 50 லட்சம் கையெழுத்து வாங்குவது என்பது ஒரு சாதனையா? அப்படியே வாங்கிவிட்டாலும் அதனால் நீட் தேர்வு ரத்தாகிவிடுமா? 
 
ஆறு கோடி தமிழர்கள் இருக்கும்  மாநிலத்தில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு நீட் தேர்வு ரத்து என்ற பம்மாத்து வேலைகள் இனிமேல் மக்கள் மத்தியில் எடுபடாது. 
 
திமுகவின் பட்டத்தை இளவரசர் உதயநிதி ஸ்டாலின் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்டு மந்திரவாதி போல் அலைந்து கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் வார்த்தைகளை கேட்டு தயவு செய்து ஏமாந்து விட வேண்டாம் என்று மக்களிடம் நாங்கள் கோரிக்கையும் வேண்டுகோளை விடுகிறோம்.  
 
திமுகவின் ஏமாற்றுதனத்தை இனியும் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று பேசினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென படம் எடுத்த பாம்பு.. இளைஞர் பரிதாப பலி..!

ஏப்ரல் 9ஆம் தேதி மீண்டும் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

கேரள முதல்வர் மகள் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு.. பதவி விலக வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்..!

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments