Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை: பிடிஆர் டுவிட்டுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (18:44 IST)
பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் குறையாமல் இருப்பது குறித்து இன்று காலை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிவு செய்த ட்விட்டிற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
 
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன என்றும் தெரிவித்திருந்தார்
 
இந்த ட்வீட்டிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும். ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments