பெட்ரோல் டீசல் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் தடுக்கின்றன என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை கடந்த 200 நாட்களாக எந்த விதமான மாற்றமும் இன்றி ஒரே விலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதற்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் விலையை குறைக்க விடாமல் சில சக்திகள் பாதுகாப்பது போல் தெரிகிறது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்
அவரது இந்த கருத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்