Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நோட்டா கட்சியா? இதுதான் ஆரம்பம்.. கருத்துக்கணிப்பு குறித்து அண்ணாமலை..!

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (08:51 IST)
பாஜகவை நோட்டாவை விட குறைவாக வாக்கு சதவீதம் வாங்கும் கட்சி என்றும் தமிழகத்தில் பாஜக நுழையவே முடியாது என்றும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் கூறிய நிலையில் நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய போது தமிழகம் போன்ற மாநிலத்திற்கு இது ஒரு ஆரம்பம் என்றும் இதுதான் முதல் படி என்றும் பாஜக நுழைய முடியாது என்று திராவிட கட்சிகள் கூறிய மாநிலம் தமிழ்நாடு என்றும் தெரிவித்தார்

நேற்று வரை அதிமுகவும் திமுகவும் நாங்கள் நோட்டா கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தனர், ஆனால் இன்று 20 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் இருப்பதை நிரூபித்து விட்டோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்

பாஜகவுக்கு 15 முதல் 20 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றாலும் அதிகபட்சமாக மூன்று தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த வாக்கு சதவீதம் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

எனக்காக ஒரு வீடு கட்டவில்லை.. ஆனால் 4 கோடி மக்களுக்கு வீடு கட்ட உதவியுள்ளேன்: பிரதமர் மோடி

20 நிமிடத்தில் 2 பாட்டில் மது குடிக்கும் போட்டி.. பரிதாபமாக பலியான யூட்யூப் பிரபலம்!

குஷ்பூ கைது! ஆடுகளோடு அடைக்கப்பட்ட பாஜகவினர்! - மதுரையில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments