தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக நிர்வாகிகளுக்கும், இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் வெளியே செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும். குறிப்பாக இரவில் தனிமையான பயணத்தை தவிர்க்க வேண்டும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
சில மாநிலங்களில் தொடர்ந்து நடந்து வரும் மோதல்களை தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு அமைப்பை தடை செய்ய உளவுத்துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுபற்றி விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.