Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் அண்ணாமலை.! கட்சிப் பணிகளை கவனிக்க 6 பேர் கொண்ட குழு நியமனம்..!!

Senthil Velan
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:40 IST)
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், மாநில கட்சிப் பணிகளை கவனிக்க 6-பேர் கொண்டக் குழுவை பாஜக தலைமை நியமித்துள்ளது.
 
பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் படிக்க உள்ளார்.
 
இதனால் தமிழகத்தில் கட்சிப் பணிகளை கவனிக்க பாஜக தலைமை 6 பேர் கொண்ட கமிட்டியை நியமனம் செய்துள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக எச். ராஜா  நியமனம் செய்யப்பட்டுள்ளார். M.சக்கரவர்த்தி , P.கனகசபாபதி, M.முருகானந்தம், ராம சீனிவாசன், S.R.சேகர் ஆகியோர் கமிட்டியின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
 
மாநிலத்தில் கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்த 3 மாத காலத்திற்கு மேற்குறிப்பிட்ட கமிட்டி கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கள் கட்சி பணிகளை மண்டல வாரியாக பிரித்து செயலாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ: கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.! வெளியான 300 வீடீயோக்கள்.! மாணவிகள் அதிர்ச்சி...!!


ஒவ்வொரு நபருகும் 1 அல்லது 2 மண்டலங்கள் ஒதுக்கப்படும் என்றும் யார் யாருக்கு எந்த மண்டலம் என குழு தலைவர் எச் ராஜா முடிவு செய்வார் என கட்சித் தலைமை செயலதிகாரி அருண் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

வக்பு வாரிய மசோதாவுக்கு விஜய் கண்டனம்.. காரசாரமான அறிக்கை..

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

அடுத்த கட்டுரையில்
Show comments