சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அனிமோ மீட்டர் பொருத்தம்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (18:37 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில்  காற்றின் வேகத்தை கண்டறியும் அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு, விமான நிலையம், ஆலந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த அனிமோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்



 
 
அனிமோ மீட்டர் உதவியால் காற்றின் வேகத்தை கண்டறிந்து அதன்மூலம் ரயில்கள் இயக்கப்படும். காற்றின் வேகம் ஒருவேளை 90கிமீக்கும் மேல் இருந்தால் உடனடியாக மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டு காற்றின் வேகம் குறைந்தவுடன் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
 
மேலும் காற்றின் வேகம் 70 கிமீக்கும் மேல் இருந்தால் ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படும் என்று கூறிய அதிகாரிகள், மழை நேரங்களில் மெட்ரோ ரயில் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்காத வகையில் மின்மோட்டார் இயக்க தயார் நிலையில் மெட்ரோ நிர்வாகம் இருப்பதாக தெரிவித்தனர்/

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய்க்கு மொத்தம் 10 வீடு!.. தனது பெயரில் மட்டுமே சொத்துக்கள்!.. வேட்புமனுவில் தகவல்!..

முதல் நாளே சொதப்பல்!.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அல்வா!. பிரச்சாரம் பண்ணாமல் பனையூருக்கு பறந்த விஜய்!...

மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்!.. வேட்புமனுவில் தகவல்!..

விஜய் சொத்து மதிப்பு 624.58 கோடி!. வேட்புமனுவில் விவரம்!...

கஞ்சா கடத்தி சிறைக்கு போனவருக்கு சீட் கொடுத்த விஜய்!.. இதுதான் உங்க டக்கா?!..

அடுத்த கட்டுரையில்
Show comments