Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதால் 2 மாணவர்கள் பலி

Advertiesment
செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதால் 2 மாணவர்கள் பலி
, செவ்வாய், 31 அக்டோபர் 2017 (16:10 IST)
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் அதிகளவு மழை பெய்து வரும் நிலையில் அவ்வப்போது இடியும் மின்னலும் மக்களை பயமுறுத்தி வருகின்றன



 
 
இந்த நிலையில் மழையில் நனைந்து கொண்டே மொட்டை மாடியில் செல்போனில் பேசி கொண்டிருந்த ஐஐடி மாணவர் ஒருவர் உள்பட இருவர் திடீரென தாக்கிய மின்னல் காரணமாக பலியானார்கள்
 
சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த ஐஐடி மாணவர் லோகேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிஷோர் ஆகியோர் நேற்று மாலை மொட்டை மாடியில் நின்று மழையை ரசித்து கொண்டிருந்தனர்.
 
அப்போது லோகேஷூக்கு செல்போனில் அழைப்பு வந்ததால் அதில் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென மின்னல் அவர்கள் மீது விழுந்தது. இதனையடுத்து இருவரும் மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூடுவாஞ்சேரி தாங்கல் ஏரி உடைப்பு? நந்திவரம் ஏரியும் உடையும் அபாயம்....