Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள அரசின் வஞ்சக எண்ணம் நியாயமற்றது - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (20:09 IST)
தமிழகத்தை பழி வாங்க வேண்டும் என்ற கேரள அரசின் எண்ணம் நியாயமற்றது என அன்புமணி ராதமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 
கேரள அரசு சிறுவாணி அணையிலிருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 
சிறுவாணி அணை என்பது கோவைக்கான குடிநீர் ஆதாரம் என்பதால் அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி சிறுவாணி அணையிலிருந்து 5 கன அடி மட்டுமே கேரளா தண்ணீர் எடுக்க முடியும்.
 
ஆனால் கடந்த 6 நாட்களாக தேவையே இல்லாமல் அதிக அளவிலான தண்ணீர் எடுக்க தொடங்கியுள்ளது. சிறுவாணி அணையிலிருந்து கேரளா அதிகமாக நீர் எடுப்பதில் எந்த நியாயமும் இல்லை. யாருக்கும் பயன் இல்லை. அட்டப்பாடி தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அப்பகுதியில் பாசனம் செய்ய கேரளா திட்டமிட்டு இருந்தாலும்.
 
இப்போது அங்கு விவசாயம் நடைபெறவில்லை. இதனால் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. கேரளா இப்படி செய்வது தமிழகத்தை பழி வாங்க வேண்டும் என்பதுதான். கேரள அரசின் பழி வாங்கள் நோக்கம் கூட நியாயமற்றது. வஞ்சக எண்ணம் கொண்டதாகும் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

எங்க இருந்து வந்துச்சு.. நொடி பொழுதில் உக்ரைனை தாக்கிய ஏவுகணை! ரஷ்யாவின் ரகசிய ஆயுதம்..?

அடுத்த கட்டுரையில்
Show comments