Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக கவர்னராக முன்னாள் குஜராத் பெண் முதல்வரா? மத்திய அரசின் புதிய திட்டம்

தமிழக கவர்னராக முன்னாள் குஜராத் பெண் முதல்வரா? மத்திய அரசின் புதிய திட்டம்
, புதன், 1 மார்ச் 2017 (05:42 IST)
தமிழக கவர்னர் ரோசய்யா பதவிக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்திற்கு என தனி கவர்னர் தேவை என ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது புதிய தமிழக கவர்னர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.




தமிழகத்தின் புதிய கவர்னராக முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாலும், மகாராஷ்ரா ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு பணிச் சூழல் அதிகம் இருப்பதாலும் விரைவில் புதிய கவர்னர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி பிரதமர் ஆனதை அடுத்து குஜராத் முதல்வரக கடந்த 2014-ம் ஆண்டு பதவியெற்றார். பின்னர் அவர் 2016-ம் ஆண்டு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மிகச்சிறந்த கடற்கரை. இந்தியாவின் அந்தமான் தீவு கடற்கரைக்கு 8வது இடம்