Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியெல்லாம் செய்ய ரூம் போட்டு யோசிப்பிங்களா? ருசிகர சம்பவம்

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (11:27 IST)
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு எருமை மாட்டின் மேல் வந்த பார்த்திபன் என்பவர் கலெக்டர் ரோஹிணியிடம் புகார் மனு அளித்தார்.
சேலத்தில் நடைபெறும் பாதாள சாக்கடைத் திட்டம், மேம்பால பணிகள், தனிக் குடிநீர் திட்டம், திருமணிமுத்தாறு திட்டம் ஆகிய மாநகராட்சி பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
 
சேலம் மாவட்ட கலெக்டர் வீடு வீடாக சென்று டெங்கு கொசுவின் உற்பத்தியைத் தடுக்க ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தால் அபராதம் விதித்து வருகிறார். ஆனால் திருமணிமுத்தாறில் கொசு ஒழிப்பதற்கு கலெக்டர் ரோஹிணி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சேலம் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை அனைத்தும் செயல்படாமல் எருமை மாட்டின் மேல் மழை பெய்தால் எப்படி மந்தமாக இருக்குமோ, அதேபோல் சேலம் மாநகராட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இது போல செய்ததாக பார்த்திபன் கூறியுள்ளார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments