சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் கலெக்டராக பொறுப்பேற்ற ரோஹினி, அவ்வப்போது பொதுமக்களின் நலனுக்காக அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மாவட்ட ஆட்சியர் ரோஹினி ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள காய்கறி பண்ணையில் காய்கறி வளர்ப்பு குறித்தும் விற்பனைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள காய்கறிகள் விற்பனை செய்யும் மையத்திற்கு சென்று சில நிமிடங்கள் காய்கறிகள் விற்பனை செய்தார். காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அருகேயிருந்த மீன்பண்ணைக்கு சென்று அங்கும் ஆய்வும் செய்தார். மாவட்ட கலெக்டர் ஒருவரே காய்கறி விற்பனை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.