Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிஹரன் நீக்கம்: தமிழ் மாநில காங்கிரஸ் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 18 ஜூலை 2024 (13:53 IST)
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கம் என அக்கட்சி அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட திரு. K. ஹரிஹரன் அவர்கள் இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று முதல் த.மா.கா வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
 
முன்னதாக  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர் கொடியை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது தெரிந்ததே..
 
ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் இதுவரை கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும், வழக்கறிஞருமான மலர்கொடி உள்பட சிலர் அரசியல் பின்னணியில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: நாதக பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு கால் எலும்பு முறிவு.. போலீசார் தகவல்..!
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments