Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாடு வந்துள்ள அமித்ஷாவை சந்திக்க உள்ள பிரபலங்கள் யார்? – வெளியான தகவல்!

Advertiesment
Amitshah
, ஞாயிறு, 11 ஜூன் 2023 (08:00 IST)
தமிழ்நாட்டிற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை முக்கிய பிரமுகர்கள் பலர் சந்திக்க உள்ளனர்.



மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னை வந்துள்ளார். அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

அவரை இன்று தொழிலதிபர்கள், சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் சந்திக்க உள்ளனர். அமித்ஷாவை சந்திக்க உள்ள 24 பிரபலங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் நல்லி குப்புசாமி, ஏ சி சண்முகம், இந்தியா சிமெண்ட்ஸ் என் சீனிவாசன் உள்ளிட்ட பல தொழில் அதிபர்கள் உள்ளனர்.

இவர்களை தவிர சினிமா துறையிலிருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் ஏ ஆர் ராஜசேகரன், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ஆகியோர் இன்று அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளனர்.

அதன்பின்னர் வேலூரில் இன்று பாஜக சார்பில் நடைபெற உள்ள 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேச உள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவின் அணுஆயுத ரகசியங்களை பதுக்கினாரா? டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பு