Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: இயக்குனர் அமீர் கோரிக்கை

Mahendran
வியாழன், 18 ஜனவரி 2024 (10:18 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இயக்குனர் அமீர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது என்பதும் இதில் காளைகளை அடக்கும் காளையர்களுக்கு பல்வேறு பரிசுகள் தரப்படுகிறது என்பதும் குறிப்பாக விலை உயர்ந்த கார்கள் பரிசளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு வீரர்கள் நாங்கள் கார்களை வைத்து என்ன செய்யப் போகிறோம், அதற்கு பதிலாக எங்களுக்கு அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை எழுப்பினர்.

இந்த நிலையில் இதே கோரிக்கையை இயக்குனர் அமீர் வைத்துள்ளார். தமிழ்நாடு அரசு பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு சேர்த்தால் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார்

மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு  அரசு பணி வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

இன்றுடன் கெடு முடிவு.. பாகிஸ்தானியர்களை வெளியேற்ற தீவிர நடவடிக்கை..!

88 % இந்தியர்களிடம் கார் வாங்கும் அளவு வசதியில்லை! - சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா!

இன்று 8 மாவட்டங்களில் கோடை மழை: இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments