Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வரும் 24-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர்

MK Stalin

Sinoj

, புதன், 17 ஜனவரி 2024 (17:41 IST)
"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் விடுமுறையில் தங்கள் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழ்நாட்டில்  பல இடங்களில் க்தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தப்பட்டு  வருகிறது.  

இந்த நிலையில்  "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல்
 
#ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர். புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.
 
திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன்.
 
தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மணி நேரம் சிக்கிக்கொண்ட குடியரசுத் தலைவர்.! காரணம் என்ன?..!!