போதையில் சிக்கி மாணவர்கள் சீரழிவதை தடுக்க 'இது மிகவும் 'அவசியம் - டாக்டர் ராமதாஸ்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், 40 நாட்களுக்கு பிறகு இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று தனது வீட்டின் முன் கருப்புச் சட்டை அணிந்து போராடினார். டுவிட்டரின் முதல்வருக்கு எதிரான ஹேஸ்டேக் பதிவிட்டனர் நெட்டிசன்ஸ்.
இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்கள் மக்கள் கூட்டமாக நின்றி அடையாள அட்டைகளைக் காட்டி மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டது.
எனவே, இன்று ஒரேநாளில் மது விற்பனை ரூ. 140 கோடி முதல் ரூ.160 கோடி எனத் தகவல் வெளியாகிறது.
மேலும், சாதாரணமாக தினமும் ரூ.80 கோடி வரை விற்பனையாகும் நிலையில் இன்று வழக்கத்திற்கு அதிகமாக வசூலாகியுள்ளதாக தகவல்.
இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
மது அருந்துவது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். அதனால் மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் மது அருந்துவதற்கான வாய்ப்புகளையே இல்லாமல் செய்ய வேண்டும்” - உலக சுகாதார நிறுவனம்(WHO) #COVID19 #WHO #PMKcallsShutTASMACever