Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு வேண்டாம் என ஏராளமான கோரிக்கைகள்! – முதல்வரிடம் அறிக்கை அளித்த ஏ.கே.ராஜன்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (10:53 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு இன்று முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல்கள் எழுந்து வரும் நிலையில், புதிதாக ஆட்சியமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்தார்.

தமிழகம் முழுவதும் பலர் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு இமெயில் உள்ளிட்டவற்றின் மூலம் கருத்து தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் பேரின் கருத்துகளை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் ஆய்வு குழு நீட் தேர்வால் என்ன பாதிப்பு என்பது குறித்த 165 பக்க ஆய்வறிக்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே.ராஜன் “பெறப்பட்ட மனுக்களில் அதிகமாக நீட் தேர்வுக்கு எதிராகவே பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments