Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்த நடிகர் அஜித்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:05 IST)
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை பறித்த நடிகர் அஜித்!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்
 
அந்த வகையில் இன்று காலை 7 மணிக்கு முன்னரே திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற அஜித் தனது மனைவியுடன் வாக்களித்தார். அவர் வாக்களிக்க வந்தபோது அவரது ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றும் அதையும் மீறி ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 
 
ஒரு கட்டத்தில் அஜித்தே தனது அருகில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்துக்கொண்டு பிறகு வந்து செல்போனை வாங்கிக் கொள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி..!!

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments