Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (08:58 IST)
முதல்வர் ஜெயலலிதா, வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் போயஸ் கார்டனில் காவிரி பிரச்னை குறித்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றபோது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.


 
 
இதனை அடுத்து, அவரை 10. 15 மணிக்கு கிரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இது குறித்து தகவல் அறிந்ததும், நள்ளிரவு முதல், தற்போது வரை, அதிமுக தொண்டர்கள் க்ரீம்ஸ் ரோட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


 
 
இதை அடுத்து, கூட்டத்தை சமாளிக்க அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசார தேதி அறிவிப்பு..!

அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!

மகளிர் உரிமைத்தொகை.. மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்பு..!

பேனரில் ஜெயலலிதா புகைப்படம்..! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு அதிமுக ஆதரவு.?

பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்! உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments