Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணப்பட்டு வாடாவை துவங்கிய அதிமுக ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ

J.Durai
திங்கள், 18 மார்ச் 2024 (09:08 IST)
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
 
இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேதி அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அமலுக்குள் வர உள்ளது.
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேட்டி, சேலை மற்றும் அதிமுக இரட்டை இலை சின்னம் பொருந்திய கவரில் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அரசியல் கட்சியினர் எப்போதும் போல பணப்பட்டுவாடாவை துவங்கியுள்ளனரா என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடயே எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments