Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடியின் பேரணியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைப்படி அனுமதி - கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி .

பிரதமர் மோடியின் பேரணியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைப்படி அனுமதி - கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி .

J.Durai

கோயம்புத்தூர் , திங்கள், 18 மார்ச் 2024 (09:01 IST)
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிராந்தி குமார் பாடி  செய்தியாளர்களை சந்தித்தார்.
 
கோவை மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேர்தல் கண்காணிப்பு பணி நடத்தப்படும்.
 
இதில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் ஜிபிஎஸ் உடன் இணைக்கப்பட்டு கோவை மாவட்ட தேர்தல் கண்காணிப்பறையிலும், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திலும் பார்க்க வசதி ஏற்படுத்த ப்பட்டுள்ளது.
 
தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரும் கட்சியினர், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தேர்தல் பிரச்சாரம் தன்னடத்தை விதிகளின்படி அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் ஆன்லைன் சமூக ஊடகங்களும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது
 
வரும் 18ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும் பாரத பிரதமர் மோடிக்கு, தேர்தல் நடத்தை விதிகள் பொருந்துமா என்ற கேள்விக்கு, பிரதமருக்கு உண்டான இசட் ப்ளஸ் பாதுகாப்பு, எஸ்பிஜி மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்புடன் நன்னடத்தை விதிகளின்படி அனுமதி உள்ளது.
 
வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர்க்கு இந்த தேர்தலில் வாக்களிக்கும் விதமாக அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தேர்தல் விதிமுறைகளில் முறைகேடுகள் நடைபெற்றால் அதனை பொதுமக்கள் புகாராக பதிவு செய்ய செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிவித்தார்.
 
இதனை தொடர்ந்து பேசிய கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியது:
 
மாநகர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, அங்கே கூடுதல் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும் என  தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் பணிக்காக வாகனங்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்