அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

Mahendran
சனி, 19 ஏப்ரல் 2025 (14:52 IST)
அதிமுக எம்எல்ஏக்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைக்க இருப்பதாகவும், அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், ஏப்ரல் 23ஆம் தேதி இன்று விருந்து நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, அதிமுக தற்போது சுறுசுறுப்பாக பல்வேறு தேர்தலுக்கு முந்தைய பணிகளை கவனித்து வருகிறது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அடுத்ததாக சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து வைக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. எம்எல்ஏக்கள் தீவிரமாக வரும் தேர்தலுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும், வெற்றி பெற வியூகங்களை சிறப்பாக வகுக்க வேண்டும் என்பதற்காகவும், எம்எல்ஏக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மே 2ஆம் தேதி அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும், செயற்குழுவில் வருபவர்களுக்கு சிறப்பான விருந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments