Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 அதிமுகவினர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (19:19 IST)
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிமுகவினர் 3 பேர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட நந்தம்பாக்கம், 158வது வார்டு அதிமுக வேட்பாளராக கவிதா ராஜசேகர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கவிதா ராஜசேகர் நேற்று மனுதாக்கல் செய்தார்.
 
ஆனால், அதே பகுதியில் அதிமுக வட்ட செயலாளர் பர்மா கண்ணனின், மனைவிக்கு சீட் வாங்கி தருவதாக அதிமுக நிர்வாகிகள் கூறியிருந்தததை நம்பி, பர்மா கண்ணன் ஆதரவாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
இந்நிலையில், கவிதா ராஜசேகருக்கு சீட் வழங்கப்பட்டதைக் கண்டித்து நந்தம்பாக்கம் அதிமுக நிர்வாகிகளான மணிகண்டபாபு, தேவகுமார், தினகரன் ஆகிய 3 பேரும், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே உள்ள 2 செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
 
இவர்களின் செயலுக்கு ஆதரவாக அப்பகுதி அதிமுகவை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் பர்மா கண்ணனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து பறித்து ராஜசேகருக்கு சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments