Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும்: கமல் டுவீட்

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:44 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் இன்று தனது இரண்டு மகள்களுடன் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனையடுத்து இன்று காலை வாக்குப் பதிவு செய்தவுடன்  தான் போட்டியிடும் கோவை தொகுதிக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோவை தெற்கு தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று அவர் வாக்கு பதிவை ஆய்வு செய்தார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’வாக்காளர்களுக்கு பணம் மற்றும் டோக்கன் கொடுப்பது குறித்து ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன் என்றும் கூறினார் இதன் பின்னர் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
 
மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments