Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அமைச்சராகிறாரா அதிமுகவின் தம்பிதுரை?: பாஜகவின் பலே திட்டம்!

மத்திய அமைச்சராகிறாரா அதிமுகவின் தம்பிதுரை?: பாஜகவின் பலே திட்டம்!

Advertiesment
மத்திய அமைச்சராகிறாரா அதிமுகவின் தம்பிதுரை?: பாஜகவின் பலே திட்டம்!
, புதன், 19 ஏப்ரல் 2017 (17:30 IST)
நாடுமுழுவதும் பலமாக கால் ஊன்றியுள்ள பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாமல் திணறி வருகிறது. இதற்காக தற்போது அதிமுகவை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.


 
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்அதிமுகவை மறைமுகமாக பாஜக தான் இயக்குகிறது எனவும், இதற்கு தடையாக இருந்த சசிகலா குடும்பத்துக்கு நெருக்கடிகளை கொடுத்து தமிழகத்தில் பின்வாசல் வழியாக பாஜகவை கால் ஊன்ற வைக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முயல்கிறது என பல்வேறு கட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தங்கள் அரசியல் ஆசையை தமிழகத்தில் நிறைவேற்ற சில அதிமுக சீனியர்களை குளிர்விக்க பாஜக டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதற்காக மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு கவுரவமான பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது மக்களவை துணை சபாநாயகராக உள்ள தம்பிதுரைக்கும், ஓபிஎஸ் அணியில் உள்ள மூத்த எம்பி ஒருவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதனால் தன் கடந்த வாரம் தம்பிதுரையும், மைத்ரேயனும் அடுத்தடுத்து பிரதமர் மோடியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கட்சி தொடங்குகிறாரா செந்தில் பாலாஜி?