கிருஷ்ணசாமியுடன் டீலிங்: ப்ரைன் வாஷ் செய்ய அதிமுக ப்ளான்!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (13:13 IST)
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. எனவே, கிருஷ்ணசாமியுடன் ஆதரவு அளிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி, சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு இல்லை. அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்தோம். தேவேந்திர குல வேளாளர் குறித்த கோரிக்கையை அதிமுக நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தற்போது இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்தார். 
 
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு அளிக்கவில்லை என கூறியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. எனவே, கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 
 
இந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் தேவேந்திர குல வேளாளர் குறித்த கோரிக்கையை நிறைவேற்ற உறுதியளிக்கப்பட்டால் கிருஷ்ணசாமி ஆதரவு அளிப்பார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments