அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாட்டு நலனுக்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவரும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக எந்த கட்சிக்கும் எடுபிடி கிடையாது. நாட்டு நலனுக்காகவே பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தன்னிச்சையாக அதிமுக முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி சமீப காலமாகவே பாஜகவிற்கு எதிராக பேசி வருகிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது. இதற்கு முன்னர், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற விபரீத முடிவெல்லாம் பாஜக எடுக்க வேண்டாம்.
டெல்லி ஆட்சியில் மோடி இருக்கட்டும். இங்கு தமிழகத்தில் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி இருக்கட்டும். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்க ஆதரவு கொடுக்கிறோம். ஆனால் எங்க இடத்திற்கு வர வேண்டும் என பாஜக நினைக்க வேண்டாம் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.