Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதவிக்கு ஏற்ற இங்கீதம் இல்லை... கிரண்பேடியை சாடிய அதிமுக!

பதவிக்கு ஏற்ற இங்கீதம் இல்லை... கிரண்பேடியை சாடிய அதிமுக!
, செவ்வாய், 2 ஜூலை 2019 (09:11 IST)
தண்ணீர் பற்றாக்குறை குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக சாடியதையடுத்து அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றக்குறை குறித்து சமூக வலைத்தளத்தில், ஊழல் அரசியலுமே காரணம். தமிழக மக்கள் சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் என கிரண்பேடி குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை அரசியல் தலைவர்கள் பலர் வன்மையாக கண்டித்தனர். 
 
இந்நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி வளர்மதி, கிரண்பேடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சென்னை மாநகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தான் வகிக்கும் மதிப்பிர்குறிய பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. 
webdunia
பெண்மைக்கே உரிய உயர்ந்த தாயுள்ளமும் சிறது இன்றி மதிப்பிற்குரிய கிரண்பேடி தெரிவித்திருக்கும் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் தண்ணீர் பற்றாக்குறை குறித்து எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்ற இங்கீதம் கூடத்தெரியாமல் வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
 
காவிரி ஆற்று நீரில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் சேர வேண்டிய உரிய பங்கினைப் பெற்றுதர பாடுபட வேண்டிய இந்த நேரத்தில், தனது பொறுப்பை தட்டிக்கழிக்காமல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கண்ணியம் காக்க வேண்டும் என்று அறிவுரையாக அல்ல அன்புரையாகக் கூறிக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக ஆட்சி கவிழ இதுதான் ஸ்கெட்ச்: ஸ்டாலின் ரூட் எது??