Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமக போட்டியிடும் தொகுதியில் பாஜகவுக்கு ஓட்டு கேட்ட பிரமுகர்! அதிர்ச்சியில் அமைச்சர்

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (08:38 IST)
தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி மாறி ஓட்டு கேட்பது, சின்னம் மாறி ஓட்டு கேட்பது போன்ற கூத்துக்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளருக்கு ஓட்டு கேட்பதற்கு பதில் பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க ஒரு பிரமுகர் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது
 
திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமுத்து நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரத்தை தொடங்கினார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட பாஜக, பாமக, அதிமுக பிரமுகர்கள் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டனர்.
 
அப்போது ஒரு வாக்காளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் பாமகவின் மாங்கனி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதற்கு பதில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கூறினார். இதனைக்கேட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் அதிர்ச்சி அடைந்தனர். பாஜக பிரமுகர் என்றும் பாராமல் அவரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டியதால் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments