Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க. பாணியில் அ.ம.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் அ.தி.மு.க. !

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:12 IST)
அமமுக வில் இருந்த செந்தில் பாலாஜியை திமுக கவர்ந்திழுத்தது போல கட்சிமாறும் ஆசையோடு இருக்கும் மேலும் சிலரைத் தங்கள் கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அதிமுக.

18 எம்.எல்.ஏ.களின் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு தினகரன் தரப்பிற்கு எதிராக வந்ததில் இருந்தே அமமுக வில் சலசலப்புகள் எழ ஆரம்பித்து விட்டன. தேர்தல் நடந்தால் செலவுகளை யார் கவனிப்பது என்ற கேள்வியில் ஆரம்பித்த சிறு விரிசல் இன்று மாபெரும் பிளவாக மாறி அந்தக் கட்சியின் ஆணிவேரையே ஆட்டி வருகிறது.

தினகரனுக்காக பதவி இழந்த எம்.எல்.ஏ.கள் அனைவரும் தேர்தலுக்கான செலவுகளை தினகரனே செய்ய வேண்டும் என எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் தினகரன் தரப்போ மொத்த செலவையும் ஏற்க மறுத்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை தலைமை செலவு செய்யும் மீதியை வேட்பாளர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறது. அதனால் அனைவரும் அதிருப்தியில் இருந்திருக்கின்றனர்.

பதவியை இழந்த சோகம் மற்றும் மேற்கொண்டு தேர்தல் செலவுகள் குழப்பத்தில்  இருந்த சிலரில் செந்தில் பாலாஜி தனது முடிவைக் கடந்த வாரம் நிகழ்த்திக் காட்டிவிட்டார். அதனால் அமமுக எந்த அளவிற்குப் பயந்து போயுள்ளதோ அதே அளவிற்கு அதிமுக வும் பயந்து போயிருக்கிறது. அதனால் அடுத்து யாரும் பிறக் கட்சிகளுக்கு தாவுவதற்குள் மீண்டும் அவர்களை அதிமுகவுக்கு இழுக்க வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளது.

அதற்காக கட்சியில் திறமையான சிலரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வெற்றிகரமாக சில அமமுக தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. அவர்களுக்குப் பதவி மற்றும் தேர்தல் செலவுகள் ஆகிய சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதனால் கூடிய விரைவில் அமமுக நிர்வாகிகளிடம் இருந்து ஏதேனும் அதிரடி அறிவிப்புகள் வெளிவரலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments